யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 205 ஆறுமுகம் வீதி, கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவஞானம் அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மரகதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற லட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சதாசிவம், சுப்பிரமணியம் மற்றும் ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தவநிதி, சோதீஸ்வரி, தியாகராம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாலசிங்கம், இராசரத்தினம், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஜந்தன், சர்மிகா, ஜெனோஜன்(பிரான்ஸ்), ஹர்யுன், சஞ்ஜித், சந்தியா, ஆர்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,ஹர்னி, ஜஷ்வி, பிரகீத் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2022 புதன்கிழமை அன்று கணுக்கேணி மேற்கு முள்ளியவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment