மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் சின்னக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கனகசூரியர் அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று மன்னாரில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சுனித்திரா, சுபத்திரா, சுதர்சன், நித்திகன்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஐங்கரராசன், கதிர்காமநாதன், சத்தியவதி(சூட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பவப்பிரியா, ஆரூரன், ஹரிசன், அம்றிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, இராசரத்தினம், சந்திரசேகரம் மற்றும் குலசேகரம், பத்மாவதி, லீலாவதி, அமராவதி, ஞானசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவஞானம் மற்றும் அம்பிகாவதி, சிவபாதம், ஞானாம்பிகை, நீலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சுதர்சன்- மகன்(சுவிஸ்)
0 Comments - Write a Comment