யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன் மதிமுகராஜா விஜயலட்சுமி அவர்கள் 15-03-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற பொன் மதிமுகராஜா(TULF, முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் செயலாளர் நாயகமும், அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவரும், சமாதான நீதவானும், திருமுருகன் களஞ்சிய உரிமையாளரும், முன்னாள் வடபிராந்திய மினிபஸ் சங்கத் தலைவரும்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவலிங்கம் அவர்களின் ஆசை அக்காவும்,விஜயமதி, கஸ்தூரிமதி, விஜயகாந், விஜயவர்மன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,மதிக்காந், விஷானி, அரிகரன், விகாஸ்னி, அஜிகரன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment