யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,நிமல்ராஜ், விமலராணி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, வசந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயக்குமாரி, ரவீந்திரன், மேகலா, காலஞ்சென்ற சிவசாந்தினி, ஜெயலட்சுமி, சரோஜினி , வனஜா, பவகோபிதன், டக்சிகா, காலஞ்சென்ற தூயலிங்கம், குணபாலலிங்கம், ராஜேந்திரன், கலாநிதி, யுகாநந்தி, யுகதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,துசியந்தன், துசியா, உஷாந்தன், நிஜந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலாதேவி(இலங்கை), துரைராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், கிருஷ்ணபிள்ளை, செல்வராணி மற்றும் தானையா, இராசம்மா, இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மகேஸ்வரி, சிவஞானமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,சஞ்ஜீவன், அபினா, ஆருணி, பிரவீனா, நிவேதன், நிஷானி, அதித்திரி, அதித்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment