யாழ். வட்டு வடக்கு சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையா அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்தர் சங்கரப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,வரதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஜினி, சுதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான பவளக்கொடி, சண்முகலிங்கம், காராளசிங்கம், இராசகோபாலநாதன், இளங்கோவன் மற்றும் மகேந்திரராஜா(பிரான்ஸ்), இளந்திரையன்(பாரிஸ்), சாந்தினி(இலங்கை), நிரோஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இரத்தினசாமி இளங்குமரன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற முத்துவேலு, மனோரஞ்சிதம்(இலங்கை), சிவமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜயலட்சுமி, சிவமலர்(இந்தியா), சிறிகமலநாயகி(இலங்கை), எதிர்மனசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சிவபெருமான், கணேசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சரஸ்வதி, சோதிவடிவேல்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற வல்லிபுரம் கருணைநாதன், புனிதாம்பிகை(பிரான்ஸ்), நாதாந்தரூபி(கனடா), ஸ்ரீவள்ளிநாயகி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,யதுசிகா, யஷேந்ரா, அபீஷ்கா, ஆருத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
2 Comments - Write a Comment