யாழ். சாவகச்சேரி சங்கத்தானை சாரதாவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் சொர்ணம்மா அவர்கள் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், நமசிவாயம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராசையா, சிவசம்பு மற்றும் நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, சகுந்தலாதேவி மற்றும் திரவியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரகுபதி, அம்பிகாபதி(ஜேர்மனி), அருந்ததி(ஜேர்மனி), ரூபதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற உமாபதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சந்திராதேவி, கோமதி, யோகலிங்கம், தியாகரன், விஜயநந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சுஹாசினி, ஷிரோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,திவாகர், பிரசாந்த், நிதர்சன், பிரியங்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,சமீரா, மீனா, ஹென்ரி, லியன்ஜே ஆகியோரின் அன்புப் பூட்டியும்,செந்தி, மகேஸ்வரன், சபேஸ்வரன், வத்சலா ஆகியோரின் பாசமிகு பெரிய அத்தையும்,சசிகலா, மைதிலி, மயூரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment