யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் மாணிக்கராஜா அவர்கள் 22-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குமாரசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஜரானி, தயந்தினி, அமலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேஸ்வரி, ஞானேஸ்வரி மற்றும் தனராஜா, காலஞ்சென்ற தருமராஜா மற்றும் புஸ்பராஜா, வியாளேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நடராஜா, தாமோதரம்பிள்ளை, குலத்துங்கம், ஜெகதீஸ்வரி, சியாமளா மற்றும் தேவகி, காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், பாக்கியநாதன், சரவணபவான், முத்துக்குமாரசாமி மற்றும் யசோதா, உருத்திராதேவி, பாசுபதன், வாசவன், கெங்காதரன், ஜங்கரன் ஆகியோரின் மைத்துனரும்,ஜெகநாதன், காள்ஸ் பைபர், சாமினி ஆகியோரின் மாமனாரும்,சரவணா, லக்ஸ்மணா, கீதன், கிஷான், கவிதா, ஷெரல் ஆகியோரின் பேரனும்,அஷ்வின், லக்ஸ்மி, ஜலேஸ் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று அரியாலை நெடுங்குளம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 03:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment