யாழ். புங்குடுதீவு ஊரதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், நீர்கொழும்பு மற்றும் கனடா மார்க்கம் ஆகிய இடங்களை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தில்லையம்பலம் அவர்கள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேதவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுசீந்திரன்(கனடா), எழிலரசி(பிரான்ஸ்), இரவீந்திரன்(கனடா), ஆனந்தரசி(இலண்டன்), கலையரசி(கலா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாமினி(கனடா), பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), தர்சினி(கனடா), ஜெயக்குமார்(இலண்டன்), திலகநாதன்(ஶ்ரீ- கனடா) ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேஸ்வரி, மனோன்மணி, தியாகராசா மற்றும் தியாகலிங்கம்(யாழ்ப்பாணம்), சிந்தாமணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பாலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, இராசலிங்கம் மற்றும் தவமணி(யாழ்ப்பாணம்), பவளராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பாலசிங்கம், பாலேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னலட்சுமி(கனடா)- காலஞ்சென்ற சதாசிவம், காலஞ்சென்ற சுபாச்சந்திரன்- வசந்தமலர்(இலண்டன்), காலஞ்சென்றவர்களானபுவனேஸ்வரி- சுப்பிரமணியம் மற்றும் இராசமணி-நடராசா(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலரும்,
ரிஷிகேசன், சாயிகேசன், ஜனனி, சோபிகா, திலக்ஷன், மதுரா, அபிலாஷ், சித்தார்த்தன், மயூரிகா, ஆதித்தன், மதுஷன், ஹரிசன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அனைத்து பெறாமக்களின் பாசமிகு பெரியப்பாவும், சிறியப்பாவும்,
அனைத்து மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment