யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கரவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் யோகேந்திரா அவர்கள் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சபாநாயகம், புஷ்பவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலினி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,சுமித்திரன்(அவுஸ்திரேலியா), கோஷலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தவேந்திரா, ஜீவேந்திரா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சசிதரன்(கனடா), காலஞ்சென்ற வசந்தி, கஜேந்தினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மன்மதராஜன்(கனடா), தாமரை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,அக்னிகன், சாரு, நிலா, அவனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 22-11-2023 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்படும், 23-11-2023 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
2 Comments - Write a Comment